Thursday, February 24, 2022

Book Review #35 Vaasippadhu Eppadi வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? by செல்வேந்திரன் Selventhiran - Stars 4/5

 

வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? by செல்வேந்திரன் Selventhiran

My rating: 4 of 5 starsவாசிப்பது எப்படி?: vasippathu eppadi?


இந்தப்புத்தகத்தை யார் படிக்கலாம்:

16-35 வயது உள்ளவர்கள், படிப்பின் அவசியம் அறியாதவர்கள், படிக்க விருப்பம் இருக்கு ஆனால் என்ன படிப்பதென்று தெரியவில்லை என்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.

வாசிப்பை பற்றிய பிரச்சார நெடி அதிகமாக உள்ளதா ?

தலையில் அடித்தாற்போல் சொன்னால் தன் சிலருக்கு கேட்கும் என்றல் இந்த நெடி அவசியம் தான்.

'வாசிப்பதன் பலன்கள்' சில வரிகள் இந்த புத்தகத்தில் இருந்து:


யோசித்துப் பாருங்கள். பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான்.

ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான்.

பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான்.

சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ‘ஜூலி ஐ லவ்யூ’ எனக் கிறுக்க மாட்டான்.

இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது.

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:


நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்துவிட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்டமாட்டான்.

அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான்.

Apart from increasing our knowledge, reading provides mental stimulation, reduces stress and strengthens our analytical skills.

books don’t arouse interest immediately. One has to continuously read to develop that interest.

View all my reviews

No comments:

Post a Comment