பதின் [Pathin] by S. Ramakrishnan - 4 Stars
'பதின்' நினைவு தெரிந்த
நாள் முதல் பதின்பருவம் வரை ஒருவனின் வாழ்க்கையை விவரிக்கிறது. முற்றிலும்
S.Ra அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் தலுவபட்டு எழுதியது. 60 தனி அதியாயங்களாக அவரது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் இவை அனைத்தும் நம்மை நமது பால்யகளதிற்கு அழைத்து செல்கின்ற. தென்இந்தியாவில் பிறந்த எவெற்கும் இது அவர்களது கதை என்றே தோன்றும் அதனை உண்மை, அதனை விவரணை. தான் செய்தை சேட்டைகள், பள்ளி காலத்தில் நடந்த சுவையான சம்பவங்கள், வீட்டில் நடந்த சம்பவங்கள், உடன் பிறந்தவர்கள் பற்றிய மறக்க முடியாத நினைவுகள், நட்பு, பிரிவு, இழப்பு, சந்தோஷம், துக்கம் என்று அனைத்துமே இங்கு பதிவாகியுள்ளது. சாதாரண வாழ்க்கை வாழ்ந்த எவருமே பதின் பருவத்தில் நடந்தவைகளை புத்தகமாக (என்னை போன்று) எழுத நினைத்தால் என்ன வருமோ அதையே இங்கு S.Ra அவர்களும் பதிவிட்டுள்ளார். புத்தகத்தின் ஆரம்பம் முதல் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க பல சம்பவங்கள் உள்ளன. ஆரம்பம் முதல் முடிவு வரை அவர் குறிப்பிடும் ஒரு நண்பர் நம்மை ஆச்சர்ய படுத்துகிறார். இப்போது அவர் என்ன செய்கிறார் என்று S.Ra அவர்களிடம் கேட்கவேண்டும்பொல் இருந்தது ஆனால் முடிவில் வரும் சம்பவங்கள் நமக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்துகிறது. மீண்டும் சிறுவயது, பால்யம், பதின் பருவத்தில் இருந்த இனிதான பக்கங்களிற்கு அழைத்து சென்றது ஆசிரியருக்கு நன்றி. |
No comments:
Post a Comment