ரூஹ்: Rooh - A Novel in Tamil by Lakshmi Saravanakumar லஷ்மி சரவணகுமார் My rating: 5 of 5 stars
The first 30% of the novel was slow, dark and dense but that's the reason it got cooked well! it made the reader to prepare and dwell in it. The formatting of the Kindle version could have been better.
You can be
You can be Rabia if you were someone who lifted someone when they were down.
Plot:
Past: Story details how the journey begins with Ahamed who belongs to the past with a mission to guard somethingPresent: We
Quotes From The Book புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்
"அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது."
"அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?
"ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?"
"வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது."
"தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி."
"அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை."
"சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்."
"எப்படியும் தளைத்து விடவேண்டுமென்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் செடிகளுக்கு மழையே ஜீவநீர்."
"இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை. வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள்."
"வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது."
"பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்." - சூஃபி கவிஞர் சா
"கடல். கடலுக்குள் கலந்த பிறகு உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை."
View all my reviews