Monday, June 22, 2020

Book Review #32 - கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் by இராபர்ட்டு கால்டுவெல், வானதி

கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் by இராபர்ட்டு கால்டுவெல், வானதி Stars 4/5 

கொற்கை. 1899இல் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்த 'அலெக்சாண்டர் ரீயா' மற்றும் 'இராபர்ட்டு கால்டுவெல்' அவர்களது ஆய்வுகள் 1902இல் நீண்ட கட்டுரையாக எழுதப்பட்டது. தற்போது 2020இல் வானதி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள்
திருநெல்வேலி, ஆதிச்சநல்லூர், காயல்பட்டணம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் நமக்கு இதுவரை அறியாத பல தகவல்களை வெறும் 60 பக்கங்களில் தருகிறது.
தொல்லியல் ஆயிவுகள் பற்றி எனக்கு எந்த பரிச்சயமும் எனக்கும் இல்லை மொழி பெயர்ப்பு அனைவரையும் வாசிக்கவைக்கும் வகையில் உள்ளது.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

“இறந்தவர்களை எரிக்கும் பழக்கமுடைய இந்தியாவில் , இந்த புதைக்கும் பழக்கம் உடைய மக்கள் எப்படி தோன்றி , எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்து போனார்கள் என்ற கேள்வி வருகிறது. இது சில நூறு வருடங்கள் மட்டுமே வயதுள்ள இடங்கள் எனில் , இந்தப் பழக்கத்தின் எச்சம் இன்னமும் இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் ? இது மட்டுமே இந்த இடங்கள் வரலாற்றுக்கு முந்தையவை என்பதை குறிக்கின்றன.”

“பல வருடங்களுக்கு முன் நான் கொற்கைக்கு சென்றிருக்கிறேன். அது ஒரு அவசரமான பயணமாக இருந்தாலும் , அங்கு நான் கண்டவையும் , கேள்விப்பட்டவையும் , இப்போது முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும் இந்தக் கொற்கையே ( கொள்கை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து மறுவியதாக இருக்கலாம் ) கிரேக்கர்களால் ' கொல்கி ' என்றழைக்கப்பட்ட துறைமுகமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.”

“இன்றைய மன்னார் வளைகுடாவை , கிரேக்கர்கள் ' கொல்கி வளைகுடா ' என்று குறிப்பதில் இருந்து இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம். பண்டைய மரபுகள் குறிக்கும் , தென்னிந்திய நாகரீகத்தின் தொட்டிலான கொற்கை இதுவே என்று முடிவு செய்யலாம். இங்கிருந்துதான் , மூன்று  சேரன் , சோழன் மற்றும் பாண்டியர்கள் பிறந்து , வளர்ந்து , பின் தங்கள் பேரரசுகளையும் , வம்சங்களையும் உண்டாக்கினார்கள் எனலாம். இங்குதான் பாண்டியர்களின் ஆட்சி தொடங்கி , பின் மதுரைக்கு போனது என்றும் தெரிந்துக் கொள்ளலாம். கொற்கை என்பதன் அர்த்தம் ' ஒரு படை முகாம் ' என்பதாகும். இதே நேரத்தில் , இன்றைய கொற்கைக்கும் , கடலுக்கும் இடையே இருக்கும் பழைய காயல் என்ற இடமே , மார்கோ போலோ அவரது நூலில் கிழக்கிந்திய கடற்கரையின் முக்கிய துறைமுகமாக குறிக்கும் ' காயில் ' என்ற இடம் என்று நான் முடிவுக்கு வந்திருந்தேன்.”

“அதாவது லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் இறப்பு என்பதை அறியாதவர்கள். அவர்கள் வயது ஆக ஆக சிறியதாகிக் கொண்டே போவார்கள். காலப்போக்கில் அவர்கள் மிகவும் சிறியதாகி விடுவதால் , வீட்டின் விளக்கு மாடத்தில் அவர்களை வைத்து விடுவார்களாம். அவர்களைப் பார்த்துக் கொள்வது பெரும் வேலையாக இருந்ததால் , இளம் வயதினர் , அவர்களை ஒரு பானையில் வைத்து , பாத்திரங்களில் அரிசி , நீர் , எண்ணெய் போன்றவற்றையும் வைத்து , ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்களாம்.”

No comments:

Post a Comment